உணவு பொருளின் தரத்தை அறிய புதிய கருவி கண்டுப்பிடிப்பு

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி

ஜேர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் உணவு பொருட்களின் தரத்தை அறியும் வகையில் அகசிவப்பு கதிர்கள் மூலம் கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

ஒரு உணவுப் பொருள் கெட்டுவிட்டதா, இல்லையா என்பது அறியாமல் நாம் உணவை கொட்டிவிடுகிறோம். அந்த பிரச்சனைக்கு தீர்வு காண தற்போது ஜெர்மனியில் உள்ள பிரான்ஹோபர் விஞ்ஞானிகள் அகசிவப்பு கதிர் முலம் உணவு பொருள் தரம் குறித்து அறிய கருவி ஒன்றை உருவாக்கி வருகின்றனர்.

முன்னதாக பல கருவிகள் இருந்தாலும் அவை பெரிய அளவில் இருப்பதால் அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இந்நிலையில் இந்த கருவி மின்னணு உதிரி பாகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கருவியானது உணவின் மீது அகசிவப்பு கதிர்களை பாய்ச்சும் அதன் மூலம் அந்த உணவு உண்ண சரியானதா என்று உறுதி செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன

மேலும், இதுவரை நடத்திய ஆய்வில் தக்காளி மற்றும் இறச்சி ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற உணவுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers