ஜேர்மனில் பிரபலங்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியானதன் பின்னணியில் யார்? வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் வெளியானததன் பின்னணியில் 20 நபர் தான் காரணம் என தெரியவந்துள்ளதாக ஃபெடரல் குற்றவியல் பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனி வரலாற்றில் இது மிகப்பெரிய ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் கசிந்துள்ளது என கூறப்பட்டது.

மேற்கு ஜேர்மனின் Hesse - இல் இருந்து 20 வயதான நபர், தனிப்பட்ட தரவுகளை திருடி, சட்டவிரோதமாக வெளியிடுவதற்கான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார்.

சந்தேக நபரை ஜனவரி 7 ம் திகதி வழக்கறிஞர் மற்றும்ஃபெடரல் குற்றவியல் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டதில், அவர் மீது குற்றச்சாட்டுகளை பரவலாக ஒப்புக் கொண்டார் மற்றும் தனது சொந்த குற்றங்களுக்கு அப்பால் பயனுள்ள தகவல்களையும் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தான் தனியாக செயல்படுவதாகவும், வேறு எவரும் அல்லது எந்த வெளிநாட்டு அரசாங்கமும் இதில் சம்பந்தப்படவில்லை என அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

வெளியான தரவுகளில் ஜேர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல், மற்றும் பிற அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கியிருந்தன.

அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்த நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers