ஜேர்மனியை உலுக்கிய கொலை: குற்றவாளியின் அடையாளம் தெரிந்தது

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் குடிமகன் ஒருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சிரிய அகதியின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அவர்மீது நேற்று கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்டு மாதம் Chemnitzஇல் ஒரு சண்டையில் Alaa S. என்று அழைக்கப்படும் அந்த சிரிய அகதி Daniel Hillig என்னும் ஜேர்மானியரை கத்தியால் குத்தி கொலை செய்ததையடுத்து பெரிய போராட்டம் வெடித்தது.

ATM ஒன்றிலிருந்து பணம் எடுத்துக் கொண்டு திரும்பும்போது Daniel, 25 முறை கத்தியால் குத்தப்பட்டார்.

சமூக ஊடகங்கள் வழியாக வேகமாக பரவிய Danielஇன் கொலை சம்பவத்தையடுத்து தொடங்கிய எதிர்ப்பு பேரணிகள், வன்முறையில் முடிந்தன.

பெரும்பாலும் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய அகதிகளை நாட்டுக்குள் அனுமதித்த ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் முடிவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிளவை பேரணிகள் முன் நிறுத்தின.

இந்நிலையில் ஜேர்மன் அதிகாரிகள், கொலை சம்பவத்தில் தொடர்புடைய, தலைமறைவாகிவிட்ட Farhad R.A என்னும் ஈராக் அகதி ஒருவரைக் கைது செய்ய சர்வதேச கைது வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது குற்றவாளியான ஈராக் அகதி Yousif Ibrahim (22) தொடர்பில் விரைவில் முடிவெடுக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers