குருவை மிஞ்சிய சிஷ்யை: ஏஞ்சலா மெர்க்கலைவிட புதிய கட்சித் தலைவரை விரும்பும் மக்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் CDU கட்சியின் புதிய தலைவரான Annegret Kramp-Karrenbauer முன்னாள் கட்சித் தலைவரும் தனது அபிமான தலைவருமான ஏஞ்சலா மெர்க்கலை விட பிரபலமானவராக 2019இற்குள் காலடி எடுத்து வைக்கிறார்.

Emnid என்னும் ஆய்வு அமைப்பு 507 வாக்காளர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 45 சதவிகிதம்பேர், அடுத்த ஆண்டில் Kramp-Karrenbauer ஜேர்மனியில் முக்கிய தலைமைப் பொறுப்பை மேற்கொள்ள வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

அவரை அடுத்து வரும் ஏஞ்சலா மெர்க்கலுக்கு 40 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. அதேபோல் 2019ஆம் ஆண்டில் Kramp-Karrenbauerஇடம் சிறு வித்தியாசத்தில் தோற்ற Merz பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று 33 சதவிகிதம் மக்கள் கூறியுள்ளனர்.

மிக நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கும் Merz, முழு நேர அரசியலில் ஈடுபட தயாராக இருப்பதாகவும், அமைச்சராக பொறுப்பு வகிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

13 ஆண்டுகள் CDU கட்சியின் தலைவராக இருந்த ஏஞ்சலா மெர்க்கல் உள்ளூர் தேர்தல்களில் பெரும் பின்னடைவை சந்தித்த பிறகு, தலைமை பொறுப்பை துறக்க முன்வந்தார்.

இன்னொரு வாக்கெடுப்பில் 43 சதவிகிதத்தினர் 2021 வரை ஏஞ்சலாவே சேன்ஸலராக நீடிக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், 38 சதவிகிதத்தினர் அவர் சீக்கிரம் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

18 சதவிகிதத்தினர் எந்த முடிவுக்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் SPD கட்சியின் தலைவரான Andrea Nahlesம் Kramp-Karrenbauerஉடன் இணைந்து பணியாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்