தீப்பிடித்து எரிந்த மெத்தை: பல மணிநேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பனியில் குளிர்ந்துபோன மெத்தையை சூடாக்குவதற்காக ஒரு இளம்பெண் செய்த முட்டாள்தனமான செயல் 200,000 யூரோக்கள் செலவை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Freudenburgஐச் சேர்ந்த ஒரு இளம்பெண், குளிர்கால பனியில் குளிர்ந்துபோன தனது மெத்தையை சூடாக்குவதற்காக தனது ஹேர் டிரையரை பயன்படுத்தியிருக்கிறாள்.

பின்னர் அவள் அயர்ந்து உறங்கிவிட மெத்தை அதிக சூடாகி தீப்பிடித்து விட்டது. அதிர்ஷ்டவசமாக கண் விழித்த அவள், தனது தந்தையின் உதவியுடன் தண்ணீர் தெளித்து அந்த தீயை அணைத்ததோடு, அதைக் கொண்டுபோய் மாடியில் போட்டிருக்கிறாள்.

தீ முழுவதும் அணைந்து விட்டதாக எண்ணிக் கொண்டு, இருவரும் மீண்டும் தூங்கச் சென்றுவிட, மாடியிலிருந்த அந்த மெத்தை மீண்டும் எரியத் தொடங்கியிருக்கிறது. மாடியில் பிடித்த தீ, சுவர்கள் வழியாக கூரைக்கு பரவியிருக்கிறது.

தற்செயலாக அந்த வழியாக சென்ற தீயணைப்பு படையில் பணி புரியும் ஒருவர், தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடிய பின்னரே தீ கட்டுக்குள் வந்திருக்கிறது.

அந்த தீயால் யாருக்கும் மோசமான காயம் ஏற்படவில்லை என்றாலும், 200,000 யூரோக்கள் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...