முடி திருத்துபவர் மீது பொலிசில் புகார் செய்த இளம்பெண்: காரணம் இதுதான்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

தான் எதிர்பார்த்ததுபோல முடி வெட்டாத முடி திருத்துபவர்மீது பொலிசில் புகாரளித்துள்ளார் ஜேர்மானியப் பெண் ஒருவர்.

முடி வெட்டிக் கொள்வதற்காக சென்ற பெண் ஒருவர், தன்மீது முடி திருத்துபவர் தாக்குதல் நடத்தியதாக புகாரளித்துள்ளார்.

அந்த 34 வயது பெண், கடையில் உள்ள புகைப்படம் ஒன்றைக் காட்டி அதன்படி முடி வெட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அவர் கேட்டுக் கொண்டதைவிட மிக குட்டையாக முடியை வெட்டியுள்ளார் அந்த முடி திருத்துபவர்.

தனது தவறு சுட்டிக் காட்டப்பட்டதும், அதை சரி செய்யும் முயற்சியில் ஏதேதோ செய்துள்ளார் அந்த முடி திருத்துபவர்.

முடி வெட்டிக்கொண்டு நேராக பொலிசாரிடம் சென்ற அந்த பெண், தன்னை முடி திருத்துபவர் தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரை ஏற்றுக் கொண்டுள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers