ஜேர்மனில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் கடந்த அக்டோபர் மாதம் குறைந்த வெப்பநிலை காரணமாக 9 பேர் இறந்துள்ளனர் என வீடற்றவர்களை கண்காணிக்கும் BAGW அமைப்பு தெரிவித்துள்ளது.

வீடற்று சாலைகளில் வசிக்கும் நபர்களே இவ்வாறு இறந்துள்ளனர்

இறந்துபோனவர்களின் ஒன்பது பேரின் உடலை பரிசோதனை செய்ததில், அவர்கள் அதிக குளிரினை தாங்கிகொள்ள முடியாமல் இறந்துபோயுள்ளனர் என தெரியவந்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் 3 பேர் இறந்துபோயுள்ளனர். 2018 ஆம் ஆண்டடில் அது ஒன்பதாக அதிகரித்துள்ளது. மேலும், வீடு இல்லாமல் வசிப்பவர்களின் எண்ணிக்கை ஜேர்மனில் முதல் முறையாக 1 மில்லியனை கடந்துவிட்டது என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்