பெண்களையும் குழந்தைகளையும் 25 ஆண்டுகளாக சூறையாடிவந்த ஓநாய் மனிதன்: ஒரு உண்மை சம்பவம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெண்கள், குழந்தைகள், ஆடுகள் மற்றும் ஆட்டுக் குட்டிகள் கொல்லப்பட்டு வந்ததையடுத்து அதன் பின்னணியில் உள்ள மர்மத்தை அறியும் முயற்சியில் சிலர் இறங்கினார்கள்.

உடல் முழுவதும் உரோமம் நிறைந்த இரண்டு கால்களால் நடக்கும் ஓநாய் போன்ற ஒரு உருவம் நகரத்தில் நடமாடுவதாக கதைகள் உலாவின.

அது என்ன என்று கண்டறியும் முயற்சியில் மக்கள் இறங்கினார்கள். கடைசியில் அவர்கள் கண்டுபிடித்தது உடலில் ஓநாய் தோலை போர்த்துக் கொண்டிருந்த அதே நகரத்தைச் சேர்ந்த Peter Stumpp என்னும் விவசாயியை 25 ஆண்டுகளாக மனிதர்களையும் கால்நடைகளையும் கொன்று வந்தது ஓநாய் அல்ல, தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் என்று தெரிந்ததால் அவர்களால் கோபத்தை அடக்க இயலவில்லை.

மிக கோரமான முறையில் பொது இடத்திலேயே கொல்லப்பட்டார் Peter Stumpp. Peter Stumpp ஜேர்மனியின் Bedburg நகரைச் சேர்ந்த ஒரு விவசாயி.

மந்திரக்கலையில் தேர்ச்சி பெற்றவன் என தன்னையே அழைத்துக் கொண்ட Peter Stumpp தன்னைக் குறித்து கூறிய விடயங்கள் மக்களை அதிரச் செய்தன.

தீர்க்க முடியாத இரத்த தாகம் கொண்ட இரத்தக் காட்டேரியாக பல ஆண்டுகளாக அந்த நபர், ஆடுகள், ஆட்டுக் குட்டிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானவர்களை அவர் கொன்று சாப்பிட்டிருக்கிறார்.

சாத்தான் தனக்கு ஒரு மந்திர பெல்ட்டைக் கொடுத்துள்ளதாகவும், அதன் உதவியால் தன்னையே பேராசை கொண்ட, வலிமையான, பயங்கரமான, பெரிய கண்களையுடைய ஓநாயாக மாற்றிக் கொள்ள முடியும் என்று கூறிய Peter Stumppமீது 25 ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த வன்மம் அனைத்தையும் மக்கள் ஒருசேரக் காட்டியபோது கடைசியில் அவனது உயிரற்ற உடல் மட்டுமே எஞ்சியது.

பின்னர் Peter Stumppஇன் கதை ஒரு ஆவணப்படமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவங்களுக்கான ஆதாரமாக, 16 பக்கங்கள் கொண்ட ஒரு ஆவணம் லண்டனில் ஒப்படைக்கப்பட்டதும் இப்போதும் அது பிரிட்டிஷ் மியூஸியத்தில் இருப்பதையும் காணலாம்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...