ஜேர்மனியில் இந்த வாரத்தில் நிகழ இருக்கும் சில மாற்றங்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இந்த வாரத்தில் நடக்கவிருக்கும் சில முக்கிய நிகழ்வுகளைக் குறித்து ஜேர்மனியில் வாழ்வோருக்கு தெரிவிக்கிறது இந்த செய்தி.

ஜேர்மனியில் அரசியல் மாற்றங்கள்

ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் பதவியில் தொடரப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில், அவரது இடத்திற்கு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க CDU கட்சியினர் வாக்களிக்க உள்ளனர்.

பிரெக்சிட் தொடர்பில் ஒரு நிகழ்வு

பிரெக்சிட்டை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் தெரஸா மே முன் வைத்துள்ள திட்டம் குறித்த வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், வாக்கெடுப்பின் முடிவுகளைப் பொறுத்து பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் உட்பட பல பெரும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலின இடைவெளி தொடர்பாக ஒரு அறிக்கை

இன்று உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை வெளியிடப்பட உள்ளது. இதற்கு முந்தைய அறிக்கை சுகாதாரம், கல்வி, அரசியல் மற்றும் பணியிட பாலின இடைவெளி, 2006ஆம் ஆண்டு முதற்கொண்டு பார்க்கும்போது முதன்முறையாக அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தது.

அதே நிலை தொடருமா, அல்லது 2018இல் முன்னேற்றங்கள் காணப்படுமா என்பதை இன்றைய அறிக்கை வெளிப்படுத்தும்.

அமெரிக்கா தொடர்பில் ஒரு மாற்றம்

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் Paul Ryan,ஏப்ரலில் பணி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதையடுத்து இன்று பிரியாவிடை கொடுக்கிறார்.

டர்னர் பரிசு அறிவிக்கப்படுகிறது

இந்த ஆண்டின் டர்னர் பரிசை பெறுபவரின் பெயர் இந்த வாரம் அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் இந்த பரிசு, கலை உலகில் வழங்கப்படும் மிகப்பெரிய பரிசாகும்.

வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டு, 25,000 பவுண்டுகள் பரிசுக்கான போட்டியில் மோதும் அனைத்து போட்டியாளர்களுமே திரைப்பட வடிவில் தங்கள் படைப்புகளை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers