ஜேர்மனில் தொழில்நுட்பம் கற்கும் நடிகர் அஜித்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் குட்டி விமானம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருந்தார். அவரின் வழிகாட்டுதல்படி உருவாக்கப்பட்ட குட்டி விமானம் பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

இந்நிலையில் அஜித் ஜேர்மனி சென்றுள்ளார்.

அங்கு சிறிய குட்டி விமானம் தொடர்பான பல தொழில்நுட்பங்களை அஜித் கற்று வருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

எந்தவொரு விஷயத்தையும் கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என தெரிவிக்கும் அஜித் ரசிகர்கள் தங்களுக்கு அஜித் ஒரு முன்உதாரணம் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்