பள்ளிச் சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் கூட்டம் ஜேர்மனியில் கைது

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பள்ளிச் சிறுமிகளை ஏமாற்றி காரில் ஏற்றிச் சென்று வன்புணர்வு செய்யும் கூட்டத்தைச் சேர்ந்த ஐந்து ஜேர்மன் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

17 முதல் 24 வயதுள்ள அந்த ஐவரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

Essen, Gelsenkirchen மற்றும் Wuppertal ஆகிய நகரங்களைச் சேர்ந்த அந்த இளைஞர்கள், 16 வயது சிறுமிகளைக் கூட பொய் சொல்லி காரில் ஏற்றிக் கொண்டு அவர்கள் காரில் ஏறினதும், அவர்களது மொபைலை பறித்துக் கொண்டு கார் கதவுகளை பூட்டி தொலைவான இடங்களுக்கு கொண்டு சென்று விடுவர்.

பின்னர் தங்கள் நண்பர்களுக்கு ‘இன்று தேளாக செயல்படலாம்’ என்று ஒரு மறைமுக செய்தி அனுப்புவார்கள்.

நண்பர்கள் வந்ததும் அனைவரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்வார்கள்.

ஒரு முறை ஒரு பெண் அவர்களுடன் பாலுறவு கொள்ள மறுத்தபோது, அவளது கைகளை உடைத்து, அடித்து துவைத்து எங்காவது புதரில் வீசிவிடுவதாக மிரட்டியிருக்கிறார்கள்.

சிறுமிகளை வன்புணர்வு செய்தபின், தாங்கள் செய்தது குறித்து பெருமையாக சமூக ஊடகங்களில் தங்களுக்குள் சாட் செய்து கொள்வார்கள்.

அந்த இளைஞர்களுக்கு மூன்று ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் முதல் ஆறு ஆண்டுகள் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதித்து Essen நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, நேற்று முன்தினம் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருத்தி, நீதிமன்றத்தில், தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டபின், வாழவே விரும்பவில்லை என்று தெரிவித்தாள்.

மற்ற சிறுமிகள் தங்களால் பாடங்களில் கவனம் செலுத்த இயலவில்லை என்றும் வெளியில் செல்லவே அச்சமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்