ஜேர்மனில் Eurowings விமான ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 14 விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக airline Eurowings விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி 12:30 p.m மணிவரை விமானங்கள் ஓடாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான ஊழியர்கள் தங்களது பணிநேர அட்டவணையில் மாற்றம் கொண்டு வரகோரியுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் என்பது தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் பற்றி பேச்சுவார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவிப்பதை எதிர்க்கிறது என்று ver.di தொழிற்சங்கம் கூறுகிறது.
லுஃப்தான்சாவைச் சேர்ந்த Eurowings தொழிற்சங்கத்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.