மேற்கு ஜேர்மனியில் உள்ள ஒரு பன்றி பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 1,700 பன்றிகள் இறந்துள்ளது.
தீவிபத்து ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்த தெளிவான காரணம் தெரியவரவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தின் Mettingen நகரில் உள்ள பன்றி பண்ணையில் திடீரென வெடித்து சிதறி தீப்பிழம்பு ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு படை மற்றும் அவசர சேவைகள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் 1,700 பன்றிகள் தீயில் இறந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.