நேருக்குநேர் மோதிக்கொண்ட சிறிய ரக ஜேர்மன் விமானங்கள்! விமானி பலி

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியின் மேற்கு பகுதியில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் விமானி ஒருவர் பலியானார்.

ஜேர்மனியின் ரிஹ்னே-வெஸ்ட்பாலியா பகுதியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, இரண்டு சிறிய ரக விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.

இரு விமானங்களும் எதிர்பாராத வகையில் வான்வெளியில் ஒன்றோடொன்று நேருக்குநேர் மோதிக்கொண்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், படுகாயமடைந்த மற்றொரு விமானி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்