ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட வெடிகுண்டு: 16,000 பேர் பாதிப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 16,000பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

ஜேர்மனியின் Frankfurt நகரில் கட்டிட வேலைக்காக பள்ளம் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. Frankfurt தீயணைப்புத்துறையினர் இந்த செய்தியை உறுதி செய்தனர்.

அந்த வெடிகுண்டின் எடை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையின்போது, பாதுகாப்பு கருதி வெடிகுண்டு இருக்கும் இடத்தைச் சுற்றி 700 மீற்றர் சுற்றளவிற்கு வசிப்போர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த நடவடிக்கையால் சுமார் 16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வெடி குண்டை செயலிழக்கச் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி, Messe அல்லது Frankfurt வர்த்தக பொருட்காட்சி நடைபெறும் இடத்திற்கருகே வழக்கமாக நின்று செல்லும் ரயில்கள் இனி நிற்காது.

ஆனால் ரயில் பாதை முழுமையாக மூடப்படுமா என்பதைக் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers