மெர்க்கலின் நாற்காலியின் இன்னொரு கால் ஆட்டம் கண்டது: தேர்தல் முடிவுகள் கொடுத்த அடுத்த அடி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலின் கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் ஒரு அடி விழுந்துள்ளது.

ஏற்கனவே பவேரிய தேர்தலில் அவரது கூட்டணிக் கட்சிகளான CDU/CSU மற்றும் SPD கடுமையான பின்னடைவைச் சந்தித்தன.

இந்நிலையில், Hesse மாகாண தேர்தலிலும் இந்த கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது மெர்க்கலின் நாற்காலியின் இன்னொரு காலையும் ஆட்டம் காணச் செய்துள்ளது.

2015ஆம் ஆண்டு அகதிகள் பிரச்சினை தொடர்பாக ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் எடுத்த முடிவு இன்று வரை அவரது அரசியல் வாழ்வுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.

ஏஞ்சலா அரசின் உள்துறை அமைச்சரான Horst Seehofer அகதிகள் பிரச்சினை தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவருக்கு கொடுத்து வந்த தொடர் அழுத்தங்களின் காரணமாக ஆட்சி கவிழும் அளவுக்கு பிரச்சினை ஏற்பட்ட நிலையில், ஏஞ்சலா சில கடும் கட்டுப்பாடுகலை விதிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார்.

ஆனால் அது தேர்தலில் வேறு விதமாக பிரதிபலித்துள்ளது. பவேரிய தேர்தலிலும் சரி, Hesse மாகாண தேர்தலிலும் சரி மக்கள் வேறு விதமாக முடிவெடுத்துள்ளார்கள்.

Hesse மாகாண தேர்தலில் பிரதமர் Volker Bouffierஇன் CDU பிரதானமான கட்சியாக தொடர்ந்தாலும், 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான தேர்தல் முடிவுகளை அந்த கட்சி சந்தித்துள்ளது.

அதேபோல் SPDயும் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான தேர்தல் முடிவுகளை சந்தித்துள்ளது.

ஆனால் இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது Greens கட்சியாகும், அதேபோல் AfD கட்சிக்கும் பெரிய முன்னேற்றம்தான். பவேரியாவைப் போலவே Hesseம் ஏஞ்சலா மெர்க்கலை கைவிட்டுள்ள நிலையில் மீண்டும் அவரது கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது எனலாம்.


மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers