ஜேர்மனியை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்! அளவுக்கு மீறி மருந்து கொடுத்து 100 பேரை கொன்ற ஆண் நர்சு

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் ஆண் நர்ஸ் ஒருவர், நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரியம் வாய்ந்த மருந்துகளை கொடுத்ததால், 100 பேர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியைச் சேர்ந்த நீல்ஸ் ஹேஜெல்(41) என்பவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த 2005ஆம் ஆண்டு, மருத்துவர் பரிந்துரைக்காத அளவுக்கு அதிகமான வீரிய சக்தி கொண்ட ஊசி மற்றும் மாத்திரைகளை நோயாளிகளுக்கு கொடுத்து வந்ததால், பலர் மரணமடைந்ததனர். இதனால் பொலிசார் இவரை கைது செய்தனர்.

பின்னர் 2008ஆம் ஆண்டில் இவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர், இவர் சிகிச்சை அளித்த பலர் மேலும் மரணமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை, டெல்மென் ஹார்ஸ்ட் மருத்துவமனையில் 65 பேரும், ஓல்டன்பெர்க் மருத்துவமனையில் 35 பேரும் நீல்ஸ் ஹேஜெல்லினால் மரணமடைந்தது தெரிய வந்தது.

இந்த விடயம் ஜேர்மனியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகப் போருக்கு பின்னர் ஜேர்மனியில் நடந்த மிகப்பெரிய குற்ற சம்பவமாக இது கருதப்படும் நிலையில், இந்த கொலைகள் தொடர்பாக ஓல்டன்பெர்க் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers