ஹாலோவின் நிகழ்ச்சியில் ஹிட்லரின் ஆடையை அணிந்து சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

Owensboro நகரில் Trail of Treats நடைபெற்ற ஹாலோவின் திருவிழாவில் நாஜிக்களின் தலைவர் ஹிட்லரின் சீருடையை அணிந்துசென்ற சிறுவர்கள் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Bryant Goldbach என்ற தந்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, எங்களுக்கு வரலாறு தொடர்பான விடயங்களை தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் உண்டு.

இதனால், ஹாலோவின் நிகழ்ச்சிக்கு எனது மகனுக்கு ஹிட்லரின் ஆடையை அணிந்து அழைத்து சென்றேன்.

அங்கு, பேய்கள், திருடர்கள் போன்று வேடம் அணிந்து வந்தவர்களை ஒன்றும் சொல்லாமல் எனது மகனை அச்சுறுத்த தொடங்கினர். எனது மகனிடம் வந்து இங்கிருந்து சென்றுவிடு என மிரட்டினர். இதனால், அந்த நிகழ்ச்சிக்கு சென்றதால் மனம் உடைந்து அங்கிருந்து திரும்பிவிட்டோம்.

அங்கிருந்தவர்களில் ஒருசிலர் எனது மகனை பாராட்டவும் செய்தனர், அவர்களுக்கு எனது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்