ஒரு மாதமாக காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர்: நடவடிக்கை எடுக்குமா ஜேர்மனி?

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

Mediterranean கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் தங்களை ஜேர்மன் நாடு ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில், இத்தாலியின் மற்றும் மல்டாவில் கடந்த ஒரு மாதமாக காத்திருக்கின்றனர்.

ஜேர்மனியின் இடதுசாரி கட்சியினர் இதுகுறித்து கூறியதாவது, புலம்பெயர்ந்தோர் ஜேர்மனிக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும். ஜேர்மன் மத்திய அகதிகள் நிறுவனமான BAMF, இவர்கள் உளவுத்துறையினரால் சோதனை செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.

ஜூலை 13 அன்று இரண்டு இராணுவக் கப்பல்களால் சிலர் காப்பாற்றப்பட்டனர் மற்றும் சிசிலிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஏனையவர்கள், ஆகஸ்ட் 10 அன்று என்ஜிஓ கப்பல் கும்பல் மூலம் காப்பாற்றப்பட்டனர், மேலும் மால்டாவுக்கு கொண்டு வரப்பட்டனர்.

இவர்களை ஏற்றுக்கொள்வதாக ஜேர்மன்உறுதியளித்துள்ளதால், இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...