கசோக்கி கொலைக்கு காரணமானவர்கள் பதில் சொல்ல வேண்டும்: ஏஞ்சலா மெர்கல் கண்டனம்

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியின் சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல், சவுதி அரேபிய பத்திரிகையாளர் கொல்லப்பட்டத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த 2ஆம் திகதி இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்ற பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி(59), அங்கு கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கசோக்கி தூதரகத்திற்குள் வைத்து கொல்லப்பட்டதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், சவுதி அரசு இதனை மறுத்தது.

இந்நிலையில் ஜேர்மனியின் சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸுடன் இணைந்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘இந்த கொலைக்கு காரணமானவர்கள், கண்டிப்பாக அவர்களது செயல்களுக்கு பதில் கூற வேண்டும். கசோக்கியின் கொலையில் சவுதி அரேபியா வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இஸ்தான்புல் தூதகரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதியைச் சேர்ந்த 8 பேர் மற்றும் முகமது பின் சல்மான் அரசின் இரண்டு உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு, இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூன்று உளவுத்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

AFP

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...