ஜேர்மனியில் துருக்கிய உணவகத்திற்கு தீவைப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் அடையாளம் தெரியாத நபர்கள் துருக்கிய உணவகம் ஒன்றிற்கு தீவைத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் அகதிகளுக்கு எதிராக எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்ட ஜேர்மன் நகரமான Chemnitz நகரில் துருக்கிய உணவகம் ஒன்றிற்கு தீவைக்கப்பட்டது.

நேற்று அதிகாலையில் அந்த உணவகத்தில் ஒரு பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து கரும்புகை ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக Saxony மாகாண பொலிசார் தெரிவித்தனர்.

தீவைத்துவிட்டு மூன்று பேர் சம்பவ இடத்திலிருந்து ஓடி கார் ஒன்றில் தப்பிச் சென்றதைக் கண்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தீ விரைந்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை.

இது இன ரீதியான தாக்குதலா என்பதை தற்போதைக்கு கூற இயலாது என தெரிவித்துள்ள பொலிசார், பல கோணங்களிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

ஆகஸ்டு மாதத்தில் ஜேர்மானியர் ஒருவர் அகதிகளால் கொல்லப்பட்டதாக செய்தி பரவியதையடுத்து அகதிகளுக்கெதிரான போராட்டங்கள் Chemnitz நகரில் வெடித்தன.

அந்த நேரத்திலும் யூதர்களுக்கு சொந்தமான ஒரு உணவகம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்