காதல் மன்னன் ஹிட்லர் பற்றி தெரியுமா?

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

உலகை அச்சுறுத்திய சர்வாதிகாரி, யூத இனமே அழிவதற்கு முக்கிய காரணமானவர், கொடூர குணம் கொண்டவர் என அறியப்பட்ட அடால்ப் ஹிட்லரின் மனதுக்குள் இருந்த ஈரமான இதயம் வெளிஉலகிற்கு அவ்வளவாக தெரிந்திருக்காது.

வரலாற்றை நாம் திரும்பி பார்க்கிறோமோ இல்லையோ, வரலாறு நம்மை திரும்பி பார்க்க வைக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர் தான் ஹிட்லர்.

உலகில் ஜேர்மனியரே உயர்ந்த இனத்தினர், உலக மக்கள் அனைவரும் தனது கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்பதற்காக நாஜி கட்சியை ஆரம்பித்தார்.

இந்த நாஜி கட்சியினர், யூத மக்களை கொன்று குவியல் குவியலாக போட்டு வைத்த புகைப்படங்கள் இன்று வரை இணையங்களில் வெளியாகி ஹிட்லரின் கொடூர முகத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால், அரக்க செயல்கள் புரிந்துவந்தாலும் இவரின் இரக்கமான மனதுக்குள் காதலும் இருந்துள்ளது. ஹிட்லரின் வாழ்வில் இதுவரை பெண்கள் இருந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இவர்கள் அனைவருமே, ஹிட்லரின் அன்புக்காக ஏங்கியவர்கள்தான். இதில் முக்கிய இடத்தை பெறுபவர் Eva Braun. இவர் தான் ஹிட்லரின் கடைசி காலத்தின் அவருடன் வாழ்ந்து, அவருடனேயே உயிழந்தார்.

எவாவுக்கு 17 வயது இருக்கையில், ஹிட்லரின் புகைப்படக்கலைஞராக இருந்தவரிடம் உதவி புகைப்படக்கலைஞராக சேர்ந்தார்.

உலகமே அஞ்சிக்கொண்டிருந்த அந்த மனிதனை பார்த்து முதல் சந்திப்பிலேயே காதல் கொண்டார் எவா. ஹிட்லரை எப்போதும் பார்த்துக்கொண்டே இருப்பார்.

எதற்காக இப்பெண் என்னை விழுங்குவது போன்று பார்க்கிறார்? என

ஒருமுறை ஹிட்லரே புகாராக தெரிவித்துள்ளார். எவாவின் காதல் பற்றி தான் அதிகமாக பேசப்பட்டதே தவிர, ஹிட்லர் எவாவின் மீது காதல் கொண்டாரா என்பது புரியாத புதிர்.

ஆனால், எவாவை தன்னுடன் தங்கவைத்துக்கொண்டார். ஹிட்லருக்காக 3 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளார் எவா.

முதல் முறை ஹிட்லரின் கவனத்தை திருப்ப தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். இரண்டாவது முறை அவர் தன்னை விட்டு வேறொரு பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருந்ததாலும், மூன்று மாதம் எவாவிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்ற ஏக்கத்தினாலும் முப்பத்தி ஐந்து தூக்கமாத்திரைகளை உட்கொள்ள இருந்தாராம்.

ஆனால் அன்று ஹிட்லர் அவரை பார்க்க வந்துவிட்டதால் அது வெறும் முயற்சியாகவே முடிந்தது.

மூன்றாவதுமுறை ஹிட்லர் தற்கொலை செய்யப்போவதால், எவா இனி வாழ இயலாது என்று தற்கொலை செய்துக்கொண்டார், சைனட் உட்கொண்டு இறந்துவிட்டார்.

இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று இவர்களின் குடும்பத்தார்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கின்றது. மற்றவர்கள் யாரேனும் வீட்டிற்கு வந்தால், எவாவை தனியாக ஒரு அறைக்கு அனுப்பிவிடுவாராம் ஹிட்லர்.

வரலாற்றில், ஹிட்லர் தன் காதலியை மறைமுகமாக வைத்திருந்ததற்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது. ஹிட்லரின் மேடை பேச்சுக்கும், கட்டை மீசைக்கும் அதிகமான பெண் விசிறிகள் அப்போது இருந்தார்களாம், தனக்கு காதலி இருப்பது வெளியுலகத்துக்கு தெரிந்தால், பெண்விசிறிகள் இருக்க மாட்டார்கள் என்று நினைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.

ஹிட்லர் எவாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்வதற்கே பல விதங்களில் நாசி படைகளை விட்டு வேவு பார்த்திருக்கிறார். அவர் யூத இனத்தை எவ்விதத்திலும் சேர்ந்தவரா என்று அறிவதற்காகவே இவ்வாறு செய்துள்ளார்.

ஹிட்லர் போட்ட அனைத்து விதிகளையும் தாண்டாமல் உண்மையாக இருந்தது கண்டிப்பாக அவரின் மீது உள்ள பயம் கிடையாது, அது காதலே.

இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா, ஜேர்மனியை வெல்ல இருந்தது. அந்த நேரத்தில் தான் எவா ஹிட்லரை திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்திமூன்று, ஹிட்லருக்கு ஐம்பத்தியாறு.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்