ஜேர்மன் ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதலின் பின்னணியில் யார்?

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
292Shares

ஜேர்மனின் கோலோன் நகலில் நடைபெற்ற தாக்குதலில் இஸ்லாமியவாத நோக்கம் இருப்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் கோலோன் மைய ரயில் நிலையத்தில் சிரியாவை சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். இதில் 3 பேர் காயமடைந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் இஸ்லாமிய நோக்கம் கருதி இதனை செய்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால், புலம்பெயர்ந்து வந்துள்ள நபர், வேலையின்மை காரணமாக மனப்பிரச்சனையில் இவ்வாறு செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் கொண்டனர்.

இந்நிலையில், அவரது வீட்டினை சோதனை செய்ததில் கிடைத்த பொருட்களின் அடிப்படையில், அவர் இஸ்லாமிய குழுவுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்