அகதிகளை வீட்டு அனுப்ப வேண்டும் என விரும்பிய ஜேர்மன் அரசியல்வாதி வீட்டுக்கு போகிறார்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
338Shares

அகதிகளுக்கு புகலிடம் அளித்ததால் உலகம் முழுவதிலும் நற்பெயர் பெற்ற நாடு ஜேர்மனி.

2015ஆம் ஆண்டு அகதிகள் பிரச்சினையின்போது அவர்களுக்கு தனது நாட்டைத் திறந்து கைநீட்டி வரவேற்றவர் ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல்.

ஆனால் அவரது அரசில் உள்துறை அமைச்சராக இருந்த கூட்டணிக்கட்சியான Christian Social Union (CSU)வைச் சேர்ந்த Horst Seehofer, அகதிகளுக்கு எதிரியாகவே திகழ்ந்தார்.

எப்போதும் அவரால் ஏஞ்சலா மெர்க்கலின் அரசு ஆட்டம் கண்டு கொண்டே இருந்தது. அகதிகளுக்கு இடமளிக்கக்கூடாது, ஏற்கனவே வந்த அகதிகளையும் திருப்பி அனுப்ப வேண்டும் என அவர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

இதனால் தனது பதவியே பறிபோகும் சூழல் ஏற்பட்ட நிலையில், Horst Seehoferஇன் கோரிக்கைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயச் சூழல் அவருக்கு ஏற்பட்டது. இதனால் அகதிகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

எல்லையில் வைத்தே அகதிகளை விசாரித்து திருப்பி அனுப்பும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

அகதிகளை ஒரு காலகட்டத்தில் வரவேற்ற ஜேர்மனி, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் நாடாக ஆகி விட்டது.

இந்நிலையில் பவேரியாவில் நடத்தப்பட்ட தேர்தலில் மக்கள், தங்கள் முடிவை எடுத்திருக்கிறார்கள்.

இதுவரை அரசியல்வாதிகள் முடிவெடுத்து வந்த நிலையில் தற்போது மக்கள் அரசியல்வாதிகளின் முடிவுகள் தவறானவை என முடிவெடுத்திருக்கிறார்கள்.

ஆம் 1957 முதல் மிக நீண்ட காலமாக பதவியில் இருந்த அகதிகளை எதிர்த்து வந்த Horst Seehofer சேர்ந்த CSU கட்சி அறுதிப் பெரும்பான்மையை இழந்திருக்கிறது.

அது வெறும் 37 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது, கடந்த முறையை விட இது 10 சதவிகிதம் குறைவு.

எங்கோ இருந்த Greens கட்சி, கிட்டத்தட்ட 17.5 சதவிகித வாக்குகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

AfD கட்சி முதல் முறையாக நாடாளுமன்றம் செல்கிறது. இந்நிலையில் மெர்க்கலின் கூட்டணிக்கட்சிகளான SPD மற்றும் CSU இரண்டுமே, ஏற்கனவே வைத்திருந்த இடங்களை இழந்துள்ளது, பவேரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழலை ஏற்படுத்தியதோடல்லாமல் ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலின் பதவிக்கும் உலை வைத்துள்ளது எனலாம்.

இதற்கிடையில் அரசியல் விமர்சகர்கள் வெளிப்படையாகவே ஜேர்மனியில் தலைமை மாறும் நேரம் வந்து விட்டது என விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்