பெண்ணை பிணைக்கைதியாக பிடித்ததால் ஜேர்மன் ரயில் நிலையத்தில் பரபரப்பு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
208Shares

ஜேர்மனின் மைனஸ் நகரில் செயல்பட்டு வரும் ரயில் நிலையம் மூடப்பட்டு, ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

நேற்று ரயில் நிலையத்துக்கு பின்புறம் ஒரு மருந்துக்கடைக்குள் திடீரென புகுந்த ஒரு மர்ம நபர், அங்கிருந்த ஒரு பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டனர்.

இதனால்,ரயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார், மர்மநபர்களிடம் இருந்து அப்பெண்ணை மீட்டனர்.

மர்ம நபரை பொலிசார் கைது செய்தனர். இது தீவிரவாதத்துடன் தொடர்புடைய சம்பவம் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்