ஜேர்மனின் பாரம்பரிய திருவிழாவில் அடித்துக்கொல்லப்பட்ட நபர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் முனிச் நகரில் நடந்து வரும் அக்டோபர் பீஸ்ட் (Oktoberfest) திருவிழாவில் 58 வயது நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாரம்பரிய திருவிழாவான இந்த விழவால் முனிச் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இது, 185-வது அக்டோபர் பீஸ்ட் திருவிழாவாகும்.

இந்த விழாவில் அமைக்கப்பட்டுள்ள பீர் கூடாரங்களில் இரண்டு ஆண்களுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில், 53 வயது அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை முனிச் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 22 ஆம் திகதி தொடங்கப்பட்ட இந்த விழா அக்டோபர் 7 ஆம் திகதி நிறைவடைகிறது.

பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers