போர் அடித்ததால் ஜெயிலுக்கு போகும் இளைஞர்கள்: சுவாரஸ்யப் பின்னணி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

வாழ்க்கை போர் அடித்ததால் இரு இளைஞர்கள் செய்த செயல் ஒன்று அவர்களை சிறைக்கு அனுப்பியுள்ளது.

ஜேர்மனியின் Autobahn நெடுஞ்சாலையில் மக்களைக் கொல்லும் நோக்கில் ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை வைத்ததால், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

24, 25 வயதுடைய அந்த இரண்டு இளைஞர்களும் நெடுஞ்சாலையின் நடுவில் சிமெண்ட் பலகைகள், கூர்மையான ஆணிகளைக் கொண்ட மரப்பலகைகள், பெரிய கற்கள், செங்கல் போன்றவற்றை வைத்து விடுவது வழக்கம்.

அடிக்கடி இந்த சம்பவங்கள் நடந்ததால் அந்த பகுதியில் பொலிசார் வேகக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தனர்.

என்றாலும் ஒரு முறை ஒரு பெண்ணின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இன்னும் பல சம்பவங்களில் கார்களுக்கு சேதம் ஏற்பட்டது.

ஒரு முறை ஆணிகள் அடிக்கப்பட்டிருந்த மரக்கட்டையை சோதனைக்கு எடுத்துக் கொண்ட பொலிசார், அந்த பகுதியில் சிக்கிய ஒரு மனிதனுடைய DNAவுடன் அந்த மரக்கட்டையிலிருந்த DNAவை பொருத்திப் பார்த்தபோது, அது அவனுடையதுதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவனுடைய கூட்டாளி ஒருவனும் சிக்கினான். அவர்கள் வீடுகளில் சோதனையிட்டபோது, அந்த மரக்கட்டையின் எஞ்சிய துண்டுகள் அவர்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

பிடிபட்ட அந்த நபர்கள், விசாரணையின்போது, வாழ்க்கையில் போர் அடித்ததாலும், மன அழுத்தத்தினாலும் இவ்வாறு செய்ததாக தெரிவித்தார்கள்.

அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது, விசாரணை தொடங்கியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்