ஜேர்மனியில் தொடரும் அகதிகள் மீதான தாக்குதல்கள்: பொலிஸ் விசாரணை தொடங்கியது

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் வன்முறைகள் அதிகரிக்க அகதிகள் தான் காரணம் என்ற பரவலான கருத்தால் எதிர்ப்புப் பேரணிகள் தொடங்கியது முதல் அகதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வெவ்வேறு கட்சிகளின் அரசியல்வாதிகள் தாக்குதல் நடந்ததாகவும், நடக்க வில்லை என்றும் மாறுபட்ட கருத்துக்களையும் சொல்லி வந்தனர்.

இந்நிலையில் சென்ற வார இறுதி நாட்களில் மீண்டும் அகதிகள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை மதியம் ஆப்கனைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் Hasselfelde என்னுமிடத்தில் இரண்டு மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை இரவு குடிபோதையில் இருந்த ஐந்து ஜேர்மானியர்கள் Halberstadtஇல் தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த மூன்று சோமாலியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

25 முதல் 30 வயதுக்குட்பட்ட இரு மர்ம நபர்கள் சனிக்கிழமை ஆப்கன் இளைஞர்கள் இருவரை கீழ்த்தரமாக திட்டியதையடுத்து ஆரம்பித்த வாய்த்தகராறு வன்முறையாக மாறியது.

இதில் அந்த 17 வயதுடைய இளைஞர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டதோடு, அவர்களை சமாதானம் செய்ய முயன்ற ஒரு பெண்ணும் ஒரு காரின்மீது பிடித்துத் தள்ளப்பட்டார்.

வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தில் மூன்று அகதிகள் மோசமான வார்த்தைகளால் திட்டப்பட்டதோடு, காயமும் அடைந்தனர்.

இனவெறியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் தொடர்பாக பொலிசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

ஆனால் இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers