விமானப் பயணியின் கைப்பையை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியிலிருந்து ரஷ்யாவிற்கு பயணம் செய்த ஒரு பயணியின் கைப்பையை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர்களுக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது, ஆம், அவரது கைப்பையில் 20 பாம்புகள் இருந்தன.

பெயர் வெளியிடப்படாத அந்த நபர் ஜேர்மனியிலிருந்து புறப்படுவதற்குமுன் பாம்புகளை வாங்கி தனது கைப்பைக்குள் வைத்திருந்ததாக மாஸ்கோ சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

தான் அந்த பாம்புகளை ஜேர்மனியிலுள்ள ஒரு மார்க்கெட்டில் வாங்கியதாக மாஸ்கோவுக்குள் நுழையும்போது அந்த நபர் தெரிவித்தார்.

என்றாலும் அந்த பாம்புகளை வாங்கியதற்கான முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அவரிடம் இருந்து அந்த பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டு மாஸ்கோவில் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஜேர்மன் அதிகாரிகளோ அப்படி ஒரு சம்பவம் புகாரளிக்கப்படவில்லை என்றும் அதனால் ஜேர்மனியில் பாதுகாப்பு சோதனையின்போது எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பாம்புகளை கைப்பையில் வைத்துக் கொண்டு போவது சட்ட விரோதம் இல்லை என்றாலும், அவற்றை விமானத்தில் கொண்டு செல்வதற்கு முறையான ஆவணங்கள் வைத்திருப்பது அவசியம் ஆகும்.

அதேபோல் ரஷ்யாவுக்குள் பாம்புகளுடன் நுழைவதற்கும் விலங்குகள் நல மருத்துவர்கள் அளிக்கும் சான்றிதழ்கள் போன்ற கூடுதல் ஆவணங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...