75 அடி உயரத்தில் கிரேனில் தூக்கில் தொங்கியது அகதியா? மக்களை திடுக்கிடச் செய்த சம்பவம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லினில் கிரேன் ஒன்றிலிருந்து ஒருவர் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த பொலிசார் 75 அடி உயரத்தில் கிரேனில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த அந்த நபரை மிகவும் கஷ்டப்பட்டு இறக்கியபோதுதான் அது பிணம் அல்ல ஒரு பொம்மை என்பது தெரியவந்தது.

அந்த பொம்மைக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து மீட்கப்படும் அகதிகள் அணிவது போன்ற life jacket ஒன்று அணிவிக்கப்பட்டிருந்ததே குழப்பத்திற்கு காரணம்.

பொம்மையின் அருகில் ’மனிதத்தன்மை’ என்று எழுதப்பட்ட ஒரு அட்டை காணப்பட்டது. மத்திய தரைக்கடல் பகுதியில் நடக்கும் அகதிகள் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு

தெரிவிப்பதற்காக இந்த பொம்மை தொங்க விடப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.

என்றாலும் இதுவரை நடந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அந்த அட்டையில் எழுதப்பட்ட எதுவும் குற்றச் செயல் சார்ந்தது இல்லை என்றாலும், அந்த சம்பவம் சட்டத்தை மீறியுள்ளதா என்னும் கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்