ஜேர்மனியில் 2-ஆம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு! 18500 பேர் அவசரமாக வெளியேற்றம்

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் இரண்டாவது உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று செயலிழக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் Ludwigshafen நகரில், கட்டுமான பணியின் போது சுமார் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த வெடிகுண்டு இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவால் வீசப்பட்டது என்று பின்னர் தெரிய வந்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் உள்ள 18,500 பேர் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணி தொடங்கியது.

மேலும், வெடிகுண்டு இருந்த இடத்தில் இருந்து 1000 மீற்றர் சுற்றுவட்ட பகுதியில் இருந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அதன் பின்னர், ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே நிபுணர்கள் வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். நாசி ஜேர்மனிக்கு எதிராக வீசப்பட்ட இந்த குண்டு 70 ஆண்டுகளாக வெடிக்காமல் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, Ludwigshafen நகராட்சி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘வெடிகுண்டு செயலிழக்கப்பட்டுவிட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பலாம்’ என தெரிவித்தது. பின்னர், 2 மணிநேரம் கழித்து மக்கள் உள்ளே வர அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கு முன்பு இதே போல் Frankfurt மற்றும் Berlin நகரங்களில் பிரித்தானிய படைகளால் வீசப்பட்ட வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

AFP

AFP

AFP

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்