துருக்கியில் தடுத்து வைக்கப்பட்ட ஜேர்மன் பத்திரிகையாளர் விடுவிப்பு

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மன் நாட்டின் பிரபல பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் Mesale Tolu என்பவர் துருக்கி நாட்டிற்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் உள்ள ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள தனது மகனுடன் சென்ற இவர் அங்கு தீவிரவாதியினருக்கு ஆதரவு தரும் விதமாகவும், அதிகமாக தீவிரவாதம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவித்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுகிறார் என குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டில் சுமார் 17 மாதங்கள் விசாரணைக்கு ஆளானார்.

இந்நிலையில், 17 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்று ஜேர்மன் திரும்பியுள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் விமானநிலையத்தில் வைத்து, 14 மாதங்களுக்கு பின் ஜேர்மன் நாட்டிற்கு செல்கிறேன் என பதிவிட்டுள்ளார் .

அவர் கூறியதாவது, துரதிருஷ்டவசமாக, நான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாட்டில் எதுவும் மாறவில்லை என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நான் துருக்கியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்களுக்காக அரசியல் ரீதியாக போராடுவேன், மேலும் துருக்கியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து அந்நாட்டிற்கு விஜயம் செய்கையில் கேள்வி எழுப்ப வேண்டும் என சான்சிலர் ஏஞ்சலாவை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்