தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷம்! பேராசிரியை பேச்சால் எழுந்த சர்ச்சை

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியில் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியை ஒருவர், தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷம் என்று கூறிய கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த கருத்தரங்கில், ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியை கரின் மிஷெல்ஸ் கலந்துகொண்டார்.

இதில் உணவுப்பொருட்களின் நன்மை, தீமைகள் குறித்து அவர் பேசினார். அப்போது தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷம் என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷமாகும். நான் தேங்காய் எண்ணெயை அழகு சார்ந்த பொருட்களில் உபயோகிப்பது குறித்து பேசவில்லை. அதை உணவில் சேர்த்துகொள்வது குறித்து பேசுகிறேன்.

லார்ட்டை(பன்றி கொழுப்பில் இருந்து செய்யப்படும் வெண்ணெய் போன்ற பொருள்) விட தேங்காய் எண்ணெய் மோசமானது. தேங்காய் எண்ணெய் மூலம் உடலுக்கு நன்மை ஏற்படும் சதவீதம் மிகக் குறைவு.

இதுகுறித்து உங்களை நான் எச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும். நீங்கள் சாப்பிடும் உணவு பொருட்களில் மிகவும் மோசமானது தேங்காய் எண்ணெய்’ என தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...