இனவெறியால் நாட்டிற்கு பெரும் அவமானம்: ஜேர்மன் ஜனாதிபதி வேதனை!

Report Print Vijay Amburore in ஜேர்மனி

நாட்டு மக்கள் அனைவரும் இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக இருக்க வேண்டும் என ஜேர்மன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜேர்மனியின் ஜனாதிபதி Frank-Walter Steinmeier இன்று ஜனாதிபதி அரண்மனையில், துருக்கிய மற்றும் ரஷ்யாவை சேர்ந்த பொதுமக்கள் தினம்தோறும் சந்திக்கும் குடியேற்றம், ஒருங்கிணைப்பு, பாகுபாடு மற்றும் இனவெறி பிரச்சனை குறித்தது கருத்து கேட்க ஒரு குழுவினை ஏற்பாடு செய்திருந்தார்.

அப்பொழுது கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி, ஜேர்மனியில் 81.7 மில்லியன் மக்களில் சுமார் 19.3 மில்லியன் மக்கள் குடியேறியவர்கள் அல்லது அவர்களது சந்ததியினர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இனவெறி குறித்து பல்வேறு புகார்கள் வருவது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் அடையும் துன்பத்தை நாம் எளிதாக கடந்து விட முடியாது. அவர்கள் இனவெறி கஷ்டத்தை தரை மட்டமாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் பேசுகையில், குடியேறுபவர்கள் இல்லாமல், அவர்களது குடும்பங்கள் இல்லாமல், அவர்களது குழந்தைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் இல்லாமல், நமது நாட்டின் பொருளாதார செழிப்பு, உண்மையில் இன்றைய சமுதாயம், சிந்திக்க முடியாதது" என்று அவர் கூறினார்.

நாம் அனைவரும் இணைந்து தான் இந்த நாட்டை வளப்படுத்தியுள்ளோம். எனவே பொதுமக்கள் அனைவரும் இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...