அபூர்வ சிகிச்சைக்காக ஜேர்மனி செல்லும் பிரித்தானிய குழந்தை: இன்ப அதிர்ச்சி கொடுத்த சுகாதார துறை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரித்தானிய குழந்தை ஒருத்தி அபூர்வ புற்றுநோய் சிகிச்சைக்காக ஜேர்மனி செல்லும் நிலையில் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பிரித்தானிய சுகாதார துறை அவளது மருத்துவ செலவுக்கு நிதி உதவி செய்ய முன் வந்துள்ளது அவளது குடுமபத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Amelia Elphee என்னும் Yorkshireஐச் சேர்ந்த குழந்தை அபூர்வ வகை 'neuroepithelial' மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டாள்.

7 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவர்கள் அவளது மூளையிலிருந்து 2 சென்றிமீற்றர் அளவுடைய கட்டி ஒன்றை அகற்றினர்.

இனி அவளுக்கு proton beam therapy என்னும் சிகிச்சை அளிக்கப்படவேண்டும். இந்த சிகிச்சை பிரித்தானியாவில் இல்லை.

எனவே அவள் ஜேர்மனியின் Essenஇலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு இந்த சிகிச்சைக்காக செல்ல வேண்டும்.

இதற்கு முன் 2014ஆம் ஆண்டு Ashya என்ற சிறுமி இதே சிகிச்சைக்காக ஐரோப்பா செல்ல விரும்பியபோது பிரித்தானிய மருத்துவர்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

Ashyaவின் பெற்றோர் மருத்துவர்களின் ஆலோசனையை மீறி அவளை ஐரோப்பாவிற்கு கொண்டு சென்றதால் பிரித்தானிய சுகாதாரத் துறை அவர்களுக்கு நிதியுதவி செய்ய மறுத்துவிட்டது.

ஆனால் தற்போது proton beam therapyயின் பலனை அறிந்து கொண்டதால் Ameliaவுக்கு சுகாதாரத் துறை நிதியுதவி செய்ய முன் வந்துள்ளதோடு விமான செலவு முதலான செலவுகளையும் ஏற்க முடிவு செய்துள்ளது Ameliaவின் குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...