பேஸ்புக்கின் புது முயற்சியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நன்மையும் மார்க் ஸக்கர்பர்கிற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையும்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஸக்கர்பர்க் பேஸ்புக்கில் செய்துள்ள மாற்றம் ஒன்று இலங்கைக்கு நன்மை பயப்பதாய் முடிந்தாலும், அவருக்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று இஸ்லாமியர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே பெரும் மோதலை உருவாக்கி சில உயிரிழப்புகளில் முடிந்தது.

இதனால் சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க இருப்பதாகவும் இந்த சோதனை முயற்சியை இலங்கை உட்பட சில உலக நாடுகளில் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

நல்ல ஒரு விடயத்தை அவர் தெரிவித்திருந்தாலும், அதற்கு அவர் கொடுத்த உதாரணம் ஒன்று அவருக்கே பெரும் தொல்லையாக ஆகியுள்ளது.

இவ்விடயம் குறித்து பேசும்போது யூத இனப்படுகொலையை மறுப்பதைப் பொருத்தவரையில் அது அனுமதிக்கப்படும் என்னும் அவரது ஒரு வாக்கியம் ஜேர்மனியில் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

ஏனென்றால் ஜேர்மனியில் பிரச்சினைக்குரிய, வெறுப்பைத் தூண்டும் செய்திகளை சமூக ஊடக இணையதளங்கள் உடனடியாக நீக்காவிட்டால் அவைகளுக்கு 50 மில்லியன் யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஜேர்மனி சட்டம் கூறுகிறது.

அதுமட்டுமின்றி யூத இனப்படுகொலையை மறுப்பு, ஜேர்மனியில் தண்டனைக்குரிய குற்றமாகும்.

மார்க்கின் கருத்துக்கு ஜேர்மனியில் கடும் எதிர்ப்பு தோன்றியுள்ள நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், யூத இனப்படுகொலையை மறுப்பவர்களுக்கு யாரும் வக்காலத்து வாங்கக்கூடாது, மாறாக உலகம் முழுவதிலும் யூத இனத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுகப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் நீதித்துறை அமைச்சரான Katarina Barleyயும் மார்க் ஜேர்மனியில் பெரும் கோபத்தைத் தூண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளதோடு அவருக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்