ஜேர்மனிக்காக 1,500 புகலிடக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் கிரீஸ்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

கிரீஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கிரீஸ் ஜேர்மனியிலிருந்து வந்த 1,500 புகலிடக் கோரிக்கைகளை பரிசீலிக்க உள்ளதாக கிரீஸின் புலம்பெயர்தல் துறை அமைச்சர் Dimitris Vitsas தெரிவித்துள்ளார்.

பெர்லினும் ஏதன்சும் சமீபத்தில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்தல் உச்சி மாநாடு ஒன்றில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

அதன்படி புகலிடம் கோருவோர் சிலர் தாங்கள் முதலில் வந்திறங்கின (மத்திய தரைக்கடல் நாடுகளான கிரீஸ் மற்றும் ஆஸ்திரியா போன்ற) ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

இது அகதிகள் படையெடுப்பை ஒழுங்கு செய்வதற்காகவும் ஒரு நாடு மட்டும் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் எடுக்கப்படும் ஒரு நடவடிக்கை என Vitsas தெரிவித்தார்.

ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் தன் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளை குறைப்பதற்காக இத்தகைய ஒப்பந்தங்களுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியை அடைந்துள்ள புகலிடக் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு பதில் நடவடிக்கையாக, தங்கள் கிரீஸிலிருந்து குடும்பங்களுடன் இணைவதற்காக 2900 புலம்பெயர்ந்தோரை ஏற்றுக் கொள்வதாக பெர்லின் உறுதியளித்துள்ளதாக Vitsas தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டில் உச்சத்தில் இருந்த துருக்கியிலிருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை 96 சதவிகிதமாக குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர், என்றாலும் தன் நாட்டிலிருக்கும் கிட்டத்தட்ட 60,000 அகதிகளை கவனித்துக் கொள்வதற்காக கிரீஸ் இன்னும் போராடி வருவதாகத் தெரிவித்தார்.

கிரீஸ் புலம்பெயர்ந்தோருக்கு வீடு ஒழுங்குபடுத்திக் கொடுத்தல் மற்றும் அவர்கள் குடிமக்களுடன் ஒத்துப்போதல் போன்ற விடயங்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ள Vitsas, முக்கியமாக Dodecanese தீவுகளில் அமைக்கப்பட்டுள்ள அதிக கூட்டமான முகாம்கள் பெரும் பிரச்சினையாக உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்