அகதிகள் நாடு கடத்தப்பட்டதை கிண்டல் செய்த அமைச்சர்: விளைவு என்ன?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
300Shares
300Shares
lankasrimarket.com

அகதிகளுக்காக தங்கள் நாட்டை அகலத் திறந்துவிட்ட அதே ஜேர்மனியில் இன்று ஒரு ஜேர்மன் அமைச்சர் அகதிகள் நாடு கடத்தப்படுவதை கிண்டல் செய்துள்ளார்.

ஜேர்மன் உள் துறை அமைச்சர் Horst Seehofer அவரது 69ஆவது பிறந்தநாள் அன்று 69 ஆப்கன் அகதிகள் நாடுகடத்தப்பட்டதைக் குறித்து கிண்டல் செய்தார்.

ஆப்கன், தாலிபான்களும் இதர இஸ்லாமியவாதிகளும் இன்னும் அரசுப் படைகளுக்கெதிராக போராடிக் கொண்டிருக்கும் பாதுகாப்பற்ற ஒரு நாடு என தெரிந்த போதிலும் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு எதிராக எடுக்கப்படும் சிக்கலான மற்றும் சர்ச்சைக்குரிய நடவடிக்கையான புகலிடம் மறுக்கப்பட்டோர் நாடு கடத்தப்படும் நடவடிக்கையை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி எடுத்துள்ளது.

இதற்கிடையில் அதிகபட்சமாக 50 பேரை மட்டுமே திருப்பி அனுப்புவது என இணக்கம் தெரிவித்ததற்கு மாறாக ஜேர்மனி அதிகமானவர்களை திருப்பி அனுப்பியதற்காக ஆப்கன் அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.

Horst Seehoferரோ எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற்போல் “எல்லாவற்றிற்கும் மேலாக எனது 69ஆவது பிறந்தநாளில் 69 பேர் ஆப்கனுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்” என்று கூறியதோடு, வேடிக்கையாக “நான் அதை திட்டமிடவில்லை” என்று வேறு கூறியுள்ளார்.

திருப்பி அனுப்பப்பட்ட 69 பேரில் 51 அகதிகள் Horst Seehoferஇன் சொந்த ஊரான பவேரியாவிலிருந்து நாடு கடத்தப்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்