ஏஞ்சலா மெர்க்கலின் பதவியைக் காப்பாற்றுமா அல்பேனியா?

Report Print Fathima Fathima in ஜேர்மனி

ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் தேடும் நபர்களுக்கான வரவேற்பு மையங்களை அல்பேனியா திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதையடுத்து, ஜேர்மனி சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலின் பதவி காப்பாற்றப்படும் எனத் தெரிய வந்துள்ளது.

ஜேர்மனி சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கலுக்கும் அவரது உள்துறை அமைச்சரான Horst Seehoferக்கும் அகதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இதனால் Horst Seehoferஇன் கட்சி ஏஞ்சலா மெர்க்கலுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து ஏஞ்சலாவின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.

Horst Seehofer ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே அகதிகள் செயல்பாட்டு மையங்களை நிறுவ வேண்டும் என்னும் திட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் தேடும் நபர்களுக்கான வரவேற்பு மையங்களை அல்பேனியா திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ஜேர்மனி சேன்ஸலரின் பதவிக்கு வரவிருந்த ஆபத்து நீங்கியுள்ளதாகத் தெரிகிறது.

அல்பேனியாவுக்கு அகதிகளுக்கு ஆதரவளிக்கும் விடயத்தில் ஏற்கனவே நல்ல அனுபவம் உள்ளது.

1998, 1999 ஆண்டுகளின்போது நடைபெற்ற பால்க்கன் போர்களின்போது அது ஒரு மில்லியன் அகதிகளை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...