நேரலையின் போது பெண் பத்திரிக்கையாளருக்கு பலவந்தமாக முத்தமிட்ட இளைஞர்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in ஜேர்மனி

ரஷ்யாவில் நடைபெற்று வரும் கால்பந்தாட்ட போட்டி தொடர்பாக பெண் பத்திரிக்கையாளர் பேசிக் கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் முத்தம் கொடுத்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியை மையமாக கொண்டு Deutsche Welle என்ற செய்தி நிறுவனம் இயங்கி வருகிறது, இங்கு கொலாம்பியாவைச் சேர்ந்த Julieth Gonzalez என்ற பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

தற்போது ரஷ்யாவில் உலகக்கிண்ணப் போட்டி பரபரப்பாக நடைபெற்று கொண்டிருப்பதால், அந்நாட்டின் Saransk பகுதியில் கடந்த 14-ஆம் திகதி நடைபெற்ற போட்டி குறித்து அந்த பெண் நிரூபர் நேரலையில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று வந்த இளைஞர் ஒருவர், அவரது கன்னத்தில் பலவந்தமாக முத்தமிட்டதுடன், சற்று தவறாகவும் நடந்து கொண்டார்.

அந்த நேரத்தில் எதையும் காட்டிக் கொள்ளாதவர், தன்னுடைய இன்ஸ்டாகிராமில், மரியாதைகுறியவர்களே, மற்ற தொழிலை போல் ஊடக தொழிலும் மேன்மை மிக்கது தான். பிற துறைகளை மதிப்பதைப் போல் ஊடக துறைக்கும் அங்கீகாரம் அளியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers