காதலி மீது கொண்ட பொறாமையால் 8 முறை குத்தி கொலை: அகதி இளைஞரின் வெறிச்செயல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி
232Shares

ஜேர்மனியில் அகதி ஒருவர் தனது முன்னாள் காதலி மீது பொறாமை கொண்ட காரணத்தால் அவரை 8 முறை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், ஜேர்மனியில் உள்ள குடியேற்ற எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி, இதுபோன்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் தென்மேற்கு நகரமான Kandel இல் 15 வயதுடைய மியா என்ற பெண்ணை அகதி ஒருவர் காதலித்து வந்துள்ளார்.

இந்த நபர், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஜேர்மன் நாட்டிற்கு அகதியாக தஞ்சம் அடைந்தவர் ஆவார். இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் மிக குறுகிய நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் தனது காதலி மியா மீது இவர் கோபம் கொண்டுள்ளார். மேலும், அவள் தன்னை விட்டு சென்றுவிட்டாள் என்று பொறாமைகொண்டுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று மருந்துகடை முன்பாக வைத்து தனது காதலி மியாவை, 8 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜேர்மன் நாட்டில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தொவித்து வரும் குடியேற்ற எதிர்ப்பாளர்கள், இந்த கொலை சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்