ஜேர்மனியில் Audi கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கைது

Report Print Kabilan in ஜேர்மனி
298Shares

பிரபல கார் நிறுவனமான Audi-யின் தலைமை செயல் அதிகாரி Rupert Stadler, ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியை தலைமையிடமாக கொண்டு வோல்க்ஸ்வோகன் கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துடனே Audi கார் நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வோல்க்ஸ்வோகன் டீசல் கார்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 மடங்கு அதிகளவு கார்பன்-டை-ஆக்சைடு புகையை வெளியேற்றுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நடத்தப்பட்ட புகை மாசு பரிசோதனையில் அந்நிறுவனம் முறைகேடு செய்ததும் தெரியவந்தது.

அதன் பின்னர், போலியாக விளம்பரம் வெளியிடப்பட்டு ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தங்களது நிறுவனத்தின் கார்களை வோல்க்ஸ்வோகன் திரும்பப் பெற்றது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் Audi கார் நிறுவனத்தின் CEO-வான Rupert Stadler ஜேர்மனியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அந்நிறுவனத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

REUTERS/Imelda Medina

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்