ஜேர்மன் சேன்ஸலருக்கு இறுதிக் கடிதம் அளிக்க இருக்கும் உள்துறை அமைச்சர்: ஆட்சி கவிழுமா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி
129Shares

முறையான ஆவணங்கள் எதுவுமின்றி ஜேர்மனிக்குள் வந்துள்ள அகதிகள் தொடர்பான பிரச்சினை குறித்து ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Horst Seehofer சேன்ஸலருக்கு ultimatum என்னும் இறுதிக் கடிதம் ஒன்றை இன்று (திங்கட்கிழமை) அளிக்க இருக்கிறார்.

இதர ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் எதிலாவது பதிவு செய்துள்ள அகதிகளுக்கு ஜேர்மனியில் அனுமதி மறுப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் முழுமைக்கும் பொதுவான முடிவு ஒன்றை எடுக்குமாறு வற்புறுத்த Horst Seehofer முடிவு செய்துள்ளார்.

அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அகதிகளை பொலிசார் எல்லையிலேயே சோதனையிட்டு திருப்பி அனுப்பும் தீர்ப்பாணை ஒன்றை அவர் வெளியிட இருக்கிறார்.

இனி ஜேர்மனியின் சேன்ஸலரான மெர்க்கலுடன் தன்னால் இணைந்து பணி புரிய முடியாது என அவர் கூறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மெர்க்கலின் CDU கட்சியும் Horst Seehoferஇன் CSU கட்சியும் கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும், மெர்க்கலின் CDU கட்சி அகதிகளை வரவேற்கிறது, Horst Seehoferஇன் CSU கட்சி அகதிகள் பிரச்சினை கடுமையான முறையில் அணுகப்பட வேண்டும் என்கிறது.

தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் Horst Seehofer, அகதிகள் பிரச்சினை காரணமாக கூட்டணியை விட்டு வெளியேறினால் மெர்க்கலின் ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகலாம் என கருதப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்