அமெரிக்காவை நம்ப முடியாது: ஜேர்மானியர்கள் ஆய்வில் தகவல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெரும்பாலான ஜேர்மானியர்கள் அரசியல் ஒத்துழைப்பைப் பொருத்தவரையில் அமெரிக்கா நம்பிக்கைக்குரிய கூட்டாளி அல்ல என்று எண்ணுவதாக சமீபத்திய வாக்கெடுப்பு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு ஒன்றில் 82% ஜேர்மானியர்கள்அமெரிக்கா ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளி அல்ல என்று எண்ணுவதாக தெரிவிக்கிறது.

14 சதவிகிதத்தினர் அமெரிக்காவை நம்பலாம் என்றும், மீதியுள்ளவர்கள் உறுதியாக தெரியவில்லை என்றும் வாக்களித்துள்ளனர்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜேர்மன் சான்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல், அமெரிக்கா நம்மைப் பாதுகாக்கும் என்று இனி நம்ப முடியாது என்றும் ஐரோப்பாவே அதன் தலைவிதியை நிர்ணயித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறியதையடுத்து இந்த ஆய்வு மேற்கோள்ளப்பட்டுள்ளது.

ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அதை கருத்தில் கொள்ளாமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அணு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதையடுத்து மெர்க்கல் இவ்வாறு அறிக்கை வெளியிட்டார்.

பெரும்பாலான ஜேர்மானியர்கள் (65%) ஈரான் ஒப்பந்தத்தில் மீதமிருக்கும் ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் வெற்றிகரமாக நிலைத்திருக்கும் என நம்புகின்றனர். 28%பேர் அமெரிக்கா இல்லாமல் ஒப்பந்தம் நீடிக்குமா என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

அதேபோல் ரஷ்யா நம்பிக்கைக்குரிய கூட்டாளியா என்று கேட்கப்பட்டதற்கு 36%பேர் அமெரிக்காவை விட ரஷ்யாவை நம்பலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு மே மாதம் 15, 17 திகதிகளுக்கிடையில் 1,200 பேரிடம் நடத்தப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers