ஜேர்மன் இளைஞர்களில் மூவரில் ஒருவருக்கு மனநலப் பிரச்சினை இருக்கிறது: ஆய்வு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் மனநலப் பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அதிலும் தலைநகரான பெர்லினில் மூவரில் ஒருவருக்கு மன நலப் பிரச்சினை இருப்பதாகவும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனமான Barmer கூறியுள்ளது.

பெர்லினில் 18க்கும் 25க்கும் இடைப்பட்ட வயதினரில் பல இளைஞர்களுக்கு மன நலப் பிரச்சினைகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

பெர்லினில் பெரும்பாலான இளைஞர்களுக்கு மன அழுத்தம் இருப்பதாகக் கண்டறியப்பட்ட அதே நேரத்தில் (2016 ஆம் ஆண்டு 96,300பேர் மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்றனர்) மற்றவர்கள் சிலருக்கு somatoform, சூழ்நிலைகளோடு ஒத்துப்போவதில் பிரச்சினைகள் மற்றும் anxiety பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அதிகமான மன நலப் பிரச்சினைகள் உடையவர்கள் பெர்லினில் இருக்க பெர்லினைத் தொடர்ந்து வருபவை Bremen, Mecklenburg-Western Pomerania மற்றும் Hamburg ஆகியவை.

அமைப்பு ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பலவீனமாக இருக்கும் ஜேர்மனியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைவிட மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாறுபட்ட சமூக அமைப்பு, வேகமான வாழ்க்கைமுறை, உடற்பயிற்சியின்மை, வேலை மற்றும் வாடகை குறித்த கவலைகள் ஆகியவையே மன நலப் பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு முடிவுகள் அச்சுறுத்துவதாக காணப்பட்டாலும், நம்பிக்கை இழக்கச் செய்யுமளவில் இல்லை என Barmerஇன் தலைவரான boss Gabriela Leyh தெரிவித்துள்ளார்.

எப்போது மன நலப் பிரச்சினைகள் குறித்து மக்கள் வெட்கப்படாத ஒரு சூழலில் நாம் வாழ்வும் வேலை செய்யவும் செய்கிறோமோ, அப்போதுதான் இந்தப் பிரச்சினைகளுக்கான காரணங்களை முழுமையாக கண்டறியவும் அவற்றைத் தடுக்கவும் முடியும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்