ஜேர்மனி கால்பந்து அணியில் இருந்து கோட்சே நீக்கம்

Report Print Kabilan in ஜேர்மனி

உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான ஜேர்மனி அணியில் இருந்து கோட்சே நீக்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் 32 அணிகள் பங்கேற்கும் 21வது உலகக் கிண்ண கால்பந்து போட்டி அடுத்த மாதம் 14ஆம் திகதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான ஜேர்மனி அணியின் 27 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியலை, அந்த அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோ வெளியிட்டுள்ளார்.

ஜேர்மனி கால்பந்து அணி 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றது. இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில், கூடுதல் நேரத்தில் வெற்றிக்குரிய கோலை ஜேர்மனியின் நடுகள வீரரான மரியோ கோட்சே(25) அடித்தார்.

இந்நிலையில், உலகக் கிண்ண அணியில் இருந்து கோட்சே நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பயிற்சியாளர் ஜோசிம் லோ கூறுகையில், கோட்சே போதிய பார்மில் இல்லாததால் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Jamie McDonald

அதே சமயம் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எந்த போட்டியிலும் விளையாடாமல் இருந்த கோல் கீப்பரும், அணித்தலைவருமான மானுல் நியூயர் சில தினங்களுக்கு முன்பு பயிற்சிக்கு திரும்பியுள்ளதால் அவர் உத்தேச அணியில் இடம்பிடித்துள்ளார்.

எனினும், அவர் தனது உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே இறுதி கட்ட அணியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயிற்சியாளர் ஜோசிம் லோவின் ஒப்பந்த காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் 2022ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக செயல்படுவார்.

தற்போது அறிவிக்கப்பட்ட ஜேர்மனி உத்தேச அணியில் தாமஸ் முல்லர், மேட்ஸ் ஹம்மல்ஸ், மரியோ கோம்ஸ், சமி கேதிரா, டோனி குரூஸ், மெசூத் ஒஸில் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...