ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம்: ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா ஆதரவு

Report Print Gokulan Gokulan in ஜேர்மனி

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கூறினாலும் பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கடந்த 2015ம் ஆண்டு ஈரான் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடக்கூடாது என கூறி அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய ஆறு நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டன.

இதற்கு பதிலாக அமெரிக்கா உட்பட நாடுகள் பொருளாதார தடைகளை விலக்கிக் கொண்டன.

இந்நிலையில் ஈரான் ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம்சாட்டிய அமெரிக்கா, விலகுவதாக அறிவித்தார்.

இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கடந்த ஞாயிறன்று மூன்று நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் விரிவாக ஆலோசனை நடத்திய நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரான் தொடர்பில் அமெரிக்காவின் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், அணு ஆயுதம் தவிர வேற வழிகளில் அழுத்தம் கொடுப்பது பற்றி யோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்