ஜேர்மனியில் காதலை ஏற்க மறுத்த மாணவி கொலை: விசாரணைகள் தீவிரம்

Report Print Trinity in ஜேர்மனி

ஜேர்மனியில் தனது காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் கழுத்தை வெட்டிக் கொலை செய்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜேர்மனியின் Nordhausen-யை சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவர், கடந்தாண்டு தன்னுடன் நட்பாக பழகிய சக மாணவி ஒருவரிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளான், தனக்கு அதுபோல எண்ணமில்லை என்று அவனது காதலை நாகரிகமாக மறுத்திருக்கிறாள் அந்த மாணவி.

எப்படியாவது அவள் காதலைப் பெற எண்ணிய அந்த மாணவன், அதற்காக ஒரு பொய் சொல்லியிருக்கிறான்.

Thuringia-ன் தலைநகரான Erfurt நகருக்கு அருகே அவசரநிலை முகாமைத்துவ சேவைகளின் தலைவராக இருப்பதாவும், மேலும் நிறுவனத்தின் பணியாளர் துறையில் வேலை இருப்பதாகவும், அந்த பணியை குறித்த பெண்ணுக்கு வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளான்.

இதை உண்மை என நம்பிய பெண், அந்த இடத்திற்கு செல்வதாக ஆசையோடு காத்துக் கொண்டிருந்தாள்.

தன்னை பற்றிய உண்மை வெளிப்படும் என்ற அச்சத்தில் சம்பவ தினமான ஆகஸ்ட் 29, 2017 அன்று அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.

அவள் இறந்த பின்னரும் முதுகிலும், மார்பிலும் குத்தியுள்ளான், தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் மாணவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த விசாரணையின் போது அவள் இறந்த பின்னர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் குற்றத்தை ஏற்க மறுத்துள்ளார்.

இதுதொடர்பான விசாரணை Thuringia நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், மூன்று நாட்கள் மேலும் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...