ஜேர்மனி சிரியாவுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களில் பங்கெடுக்காது: மெர்க்கல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சிரியாவுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் எதிலும் ஜேர்மனி பங்கு கொள்ளாது என ஜேர்மனியின் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

நேற்று டென்மார்க் பிரதமருடன் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேட்டியளித்த ஜேர்மனியின் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரை சிரியாவுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்கள் குறித்த முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த ஏஞ்சலா மெர்க்கல் இருந்தாலும் என்ன நடக்கிறது என்பதை தாங்கள் கவனித்துக் கொண்டிருப்பதாகவும் வேதிப்பொருட்களின் பயன்பாடு ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதல்ல என்பதை உறுதி செய்யும் எந்தமுயற்சிக்கும் தாங்கள் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

சிரியாவின் கிழக்கு கௌட்டா பகுதியில் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் வேதிப்பொருட்கள் தாக்குதலுக்கு பதிலளிக்க மேற்கு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள மெர்க்கல் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியாவுக்கு எதிராக பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ரஷ்யாவோ தொடர்ந்து வேதிப்பொருட்கள் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்று மறுத்து வருகிறது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தங்களுக்கெதிராக புனையப்பட்ட கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்