உலகிலேயே அதிவேகமாக வளர்ந்துவரும் நகரங்களின் பட்டியலில் பெர்லின்

Report Print Athavan in ஜேர்மனி

உலகிலேயே சொத்துகளின் மதிப்பு (fastest-rising property rates)அதிவேகமாக வளர்ந்துவரும் நகரங்களின் பட்டியலில் பெர்லின் முதல் இடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

Frank Knight எனும் ரியல் எஸ்டேட் கன்சல்டன்சி நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் பெர்லினில் உள்ள சொத்துகளின் மதிப்பு 2017-ம் ஆண்டில் மட்டும் 20.5% ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

இதை ஒப்பிடுகையில் உலகில் உள்ள எந்த நகரத்தின் சொத்து மதிப்பும் பெர்லின் போன்று இவ்வளவு அதிகமாக உயர்ந்தது இல்லை எனபது குறிப்பிடத்தக்கது.

சீரான மக்கள் தொகை வளர்ச்சி, பொருளாதார நிலைத்தன்மை, குறைந்த அளவிலான வேலையின்மை மற்றும் அதிகரிக்கும் வெளிநாட்டு முதலீடுகள் ஆகியவை பெர்லின் நகரின் மதிப்பு அதிகரிக்க முக்கிய காரணிகளாக அமைந்துள்ளது.

2004ம் ஆண்டில் இருந்ததை விட தற்போது 120%-க்கும் அதிகமாக பெர்லினில் உள்ள சொத்துகளின் மதிப்பு உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் இந்த அபார வளர்ச்சியை பெர்லின் மட்டும் அடையவில்லை ஜெர்மனியின் முக்கிய நகரங்களாகிய ஹாம்பர்க், முனிச், மற்றும் பிராங்பேர்ட் ஆகிய நகரங்களும் டாப் 10 பட்டியளில் இடம் பெற்றுள்ளன.

துருக்கியின் İzmir நகரம் கடந்த ஆண்டு 18.5% வளர்ச்சி அடைந்து பெர்லினுக்கு அடுத்த்தாக இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

அடுத்ததாக ஐஸ்லாந்தின் Reykjavik 16.6%, கனடாவின் Vancouver 16.0% , Hong Kong 14.8%, ஹங்கேரியின் Budapest 15.5% ஆகிய நகரங்கள் உலகின் சொத்துகளின் மதிப்பு வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் டாப் 5 இடங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்